Leading Expert Experienced Neuro Psychiatrist | 5 Star Rated | Top Best Psychiatry Clinic | Chennai, India | Depression / Head ache / Anxiety / Stress / Child Behavior / Dementia | Online / Video/ Telemed Consult / Counselling
ph: +91 95661 33660
info
நமது பெற்றோர் மற்றும் தாத்தா & பாட்டி காலத்தில் நாம் கேள்வியே பட்டிராத விஷயம்...சமூக வலைத்தளங்கள். நமக்குப் புதுமையாகவும், நேரத்தை விரயமாக்கும் விஷயமாகவும் தெரிகிற இவை, நம் குழந்தைகளுக்கோ தவிர்க்க முடியாத சுவாரசியம். அவர்கள் பிற்காலத்தில் தம்மை தம் தொழிலில் முன்னேர தேவையான ஒரு சாதனங்களில் இதுவும் ஒன்று என்பதனால் எல்லா பெற்றோர்களும் சமூக வலைத்தளங்களின் உபயோகங்கள் மற்றும் அபாயங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் நுழைய 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது நியதி. ஆனாலும், டீன் ஏஜை கூடத் தொடாத பல குழந்தைகளும் அதில் இருக்கவே செய்கிறார்கள். 'ஃபேஸ்புக்ல இருக்கியா.... ட்விட்டர்ல இருக்கியா...?' என்கிற கேள்விகளுக்கு இல்லை என்று சொல்வது அவர்களைப் பொறுத்தவரை அநாகரிகம்.....கௌரவக்குறைவும் கூட.
இன்றைக்கு மிக இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் அறிமுகமாகிறது. ஆனால் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு செல்ஃபோனையோ, ஃபேஸ்புக், ட்விட்டர் மாதிரியான விஷயங்களையோ கையாள மனமுதிற்சி இல்லை.
7 வயது கவுதம், தனக்கு செல்ஃபோன் கேட்டு அடம்பிடிப்பதைப் பெருமையாகச் சொன்னார்கள் அவனது பெற்றோர். ''அம்மாவும், அப்பாவும் வீட்ல இல்லாதப்ப, எனக்கு ஏதாவது பிரச்னைன்னா நான் எப்படிப் பேசறது?'' என்பது கவுதமின் கேள்வி. பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டில் தனியே பிள்ளைகளை விட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லை. ஆட்கள் இருக்க வேண்டிய இடத்தை டெக்னாலஜி ஆக்கிரமிக்கிறது. செல்ஃபோன், இன்டர்நெட், ஈமெயில் என எல்லா வசதிகளையும் வீட்டுக்குள் வரவழைக்கிறார்கள். செல்ஃபோனை பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி என்பதோ, செல்ஃபோனிலும், இன்டர்நெட்டிலும் விளையாட்டுத் தனமாக அவர்கள் செய்கிற சில விஷயங்கள் பிற்காலத்தில் பெரிய பிரச்னைகளை இழுத்து விடப் போகிறது என்பதை அவர்கள் அறிவார்களா?
''என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஃபேஸ்புக்லயும், ட்விட்டர்லயும் இருக்காங்க. எனக்கும் அக்கவுன்ட் ஆரம்பிச்சுக் கொடுங்க' என்று அடம் பிடிக்கிற பிள்ளைகள் அனேகமாக எல்லார் வீடுகளிலும் இருப்பார்கள். பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காமல் அதற்கு அனுமதிக்கிற பெற்றோர், அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என இருக்காமல், பிள்ளைகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது முக்கியம்.
அந்தரங்க விஷயங்கள் பாதுகாப்பாக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் எவை, பகிரக்கூடாதவை எவை என்கிற வேறுபாட்டையும், அதற்கான காரணத்தையும் விளக்கிச் சொல்லுங்கள். அந்நியர்களிடம் எச்சரிகையாக இருக்க வேண்டியது யதார்த்த உலகத்தில் எப்படி முக்கியமானதோ, அதே மாதிரி வலைத்தள யுகத்திலும் அவசியம் என வலியுறுத்துங்கள். எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் இணையதள இன்னல்கள் பற்றிப் பாடம் எடுக்கத் தவறாதீர்கள். நிஜ வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் செய்யத் தயங்குவோமோ, யோசிப்போமோ, அதை ஆன்லைனிலும் செய்யக் கூடாது என்பதைப் பதிய வையுங்கள்.
அதற்காக உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டரை தொட்டாலே ஆபத்து எனக் குறுக்கே விழுந்து தடுக்காதீர்கள். இணையதளங்களைப் பற்றியும், வலைப் பதிவைப் பற்றியும் தவறான தகவல்களைக் கேள்விப்பட்ட சில பெற்றோர், தம் குழந்தைகளை கம்ப்யூட்டரை தொடவே விடாமல் கறாராக நடந்து கொள்வதையும், பிறகு திடீரென ஒரு நாள், தம் பிள்ளைகள் தமக்கே தெரியாமல் கம்ப்யூட்டரை பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் தெரிந்து கொண்டு அதிர்ச்சியாவதைப் பார்த்திருக்கிறேன். உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும் உபயோகிக்கட்டும். கம்ப்யூட்டரானது உங்கள் வீட்டின் பிரதான இடத்தில் உங்கள் பார்வையில் படும்படி இருக்கட்டும். பிள்ளைகளின் அறையில் தனி கம்ப்யூட்டர் வைக்க அனுமதிக்காதீர்கள். அது அவர்களது நடவடிக்கைகளை நீங்கள் கண்காணிப்பதைத் தடுத்து விடும். அதில் அவர்களுக்கு உடன்பாடிருக்காதுதான். ஆனாலும் பரவாயில்லை. பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதைவிட, பாதுகாப்பாக இருப்பதுதானே பெற்றோருக்கு முக்கியம்? பார்வையில் படும்படியான இடத்தில் கம்ப்யூட்டரை வைத்து, அவர்கள் உபயோகிக்கிற போது, அவர்கள் இணையதளத்தில் என்ன பார்க்கிறார்கள், எத்தனை மணி நேரம் செலவிடுகிறார்கள் என்பதையும் உங்களால் கவனிக்க முடியும். பெற்றோர் கண்காணிக்கிறார்கள் என்கிற பயத்தில், பிள்ளைகளும் தவறான வழிகளைப் பற்றி யோசிக்க மாட்டார்கள்.
அறிவு வளர்ச்சி மற்றும் கல்வி சம்பந்தமாக கம்ப்யூட்டரை / இணயதளத்தை குழந்தைகள் பயன்படுத்துவதைத் தடுக்காதீர்கள். ஆனால் சிறு குழந்தைகள் தன் சுவாரசியத்திற்காக கம்ப்யூட்டர் உபயோகிக்கிற நேரம் 30 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க அனுமதிக்காதீர்கள். அதுவும் அந்தக் குழந்தை விரும்பினால் மட்டுமே. ஆனால் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளிடம் இந்த நேரக் கணக்கு செல்லுபடியாகாது. ஆனாலும் இந்த கோட்பாடை நீங்கல் வலியுருத்துவது அவசியம்.
அது மட்டுமல்ல பெற்றோரே.... உங்கள் பிள்ளைகள் பார்க்க விரும்புகிற இணையதளங்கள் பற்றியும், உபயோகிக்க ஆசைப்படுகிற கருவிகள் பற்றியும் தெரிந்து வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகளிடமே அவற்றைப் பற்றிப் பேசலாம். உங்கள் குழந்தையின் டிஜிட்டல் உலகத்தில், நீங்கள் ஒரு ஆர்வமுள்ள பயணியாக மாறுங்கள். உங்கள் மகனிடம் அல்லது மகளிடம் அவன(ள)து விருப்பமான கேம்ஸ் பற்றியும், விருப்பமான இணையதளம் பற்றியும், வீடியோ மற்றும் செயல்பாடுகள் பற்றியும் ஆர்வமாகக் கேளுங்கள். உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்திலும், பகிர்ந்து கொள்ளும் விருப்பத்திலும் பிள்ளைகளும் உங்களுக்கு இசைவார்கள். ஒருவேளை நீங்கள் இவற்றையெல்லாம் செய்யத் தவறினால், டிஜிட்டல் குடியுரிமையை நோக்கிய அவர்களது உலகத்திலிருந்து நீங்கள் தனித்து நிற்பீர்கள்.
அதே சமயம் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளின் உலகத்தில் அளவுக்கதிகமாக தலையிடுவதையும் தவிருங்கள். அவர்கள் அனுமதிக்கக்கூடிய சுதந்திரத்தைத் தடை செய்யாதீர்கள். தொழில்நுட்ப விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பதில் உங்கள் பிள்ளைகள் நிச்சயம் உங்களைவிட ஒருபடி மேலே தான் இருப்பார்கள். எனவே அவர்களுடனான அந்த ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்க முனையாதீர்கள். அவர்கள் சரியான பாதையில்தான் செல்கிறார்கள் என்பதைக் கவனித்தபடி, அவர்களுடனேயே பயணியுங்கள்.
Chapter 12
இன்டர்நெட்டில் செலவிடும் நேரம் ஆக்கப்பூர்வமானது, அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்காது. ஆனால் அளவுக்கு மீறிய, தேவைக்கு அதிகமான இன்டர்நெட் நேரக்கழிப்பு அன்றாட வாழ்க்கையை, வேலையை, உறவுகளைக் கட்டாயம் பாதிக்கும். உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள், இயல்பு வாழ்க்கையில் அவர்களது நண்பர்களுடன் செலவிடுகிற நேரத்தைவிட, இன்டர்நெட் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறார்களா? இன்டர்நெட்டில் கேம்ஸ் விளையாடும் அவர்களது நேரத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லயா? கல்வி சரிந்தாலும், நண்பர்கள் பிரிந்தாலும், உங்கள் பிள்ளைகள் இன்டர்நெட்டில் / கம்ப்யூடர் கேம்சில் மூழ்கியுள்ளார்களா? ஜாக்கிரதை! . அவர்கள் இன்டர்னெட் அட்டிக்ட் (internet addict) ஆகி இருக்கலாம்.
உலக நடப்புகள், உள்ளூர் தகவல்கள், பொழுதுபோக்குச் செய்திகள் என எல்லாவற்றையும் நமது உள்ளங்கைகளுக்கே கொண்டு சேர்ப்பதில் இன்டர்நெட்டை மிஞ்ச வேறெதுவும் இருக்காது. இன்டர்நெட் இணைப்புள்ள கையடக்க செல்ஃபோனில் தொடங்கி, டேப்லட், லேப்டாப், கம்ப்யூட்டர் என எதன் மூலமாகவும் இன்டர்நெட்டை அடையலாம். இ மெயிலும், பிளாக்கு (blog) களும், வலைத்தளங்களும் தெரிந்தவர்களுடன் மட்டுமின்றி தெரியாதவர்க-ளுடனும் தொடர்பு கொள்ளவும், தெரிந்த விஷயங்களை மட்டுமின்றி, தெரியாத எதைப் பற்றியும் அறிந்து, விவாதிக்கிற இடங்களாகி விட்டன. ஆனால் உங்கள் பிள்ளைகளைப்பொருத்தவரை இன்டர்நெட் உபயோகம் எதுவரை அனுமதிக்கத் தக்கது?
இன்டர்நெட் உபயோகம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவையைப் பொறுத்தது. அறிவு வளர்ச்சிக்கு அல்லது பள்ளிக்கூட பிராஜக்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக பிள்ளைகள் இன்டர்நெட்டை உபயோகப்படுத்தலாம். அல்லது தொலைதூரத்தில் உள்ள தன் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் தொடர்பிலிருக்க, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம். இரண்டுமே தவறில்லை. அளவோடு இருக்கும் வரை...
படிப்பு, பள்ளிக்கூடம், இதர வேலைகள், வீடு, உறவுகள் என எல்லாவற்றையும் மறக்கச் செய்கிற அளவுக்கு அதிக நேரத்தை இன்டர்நெட்டில் செலவிடுவதுதான் ஆபத்தின் அறிகுறி. அப்போது அதில் உங்கள் தலையீடு நிச்சயம் இருக்க வேண்டும்.
தற்சுகத்திலும், பொழுதுப்போக்கிலும் ஆரம்பித்து இன்டெர்நெட் அடிமைத்தனத்தில் முடியலாம்.
உங்கள் பிள்ளை இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களையோ, அது தொடர்பான விஷயங்களையோ பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுவதுதான் இன்டெர்நெட் அடிமைத்தனம் அல்ல. இணையதள அடிமைத் தனத்துக்கான அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும். உதாரணத்துக்கு தினம் இத்தனை மணி நேரத்தைத் தாண்டினாலோ, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக மெசேஜ் அனுப்பினாலோ அதை இன்டர்நெட் அடிமைத்தனம் எனக் கணக்கிட முடியாது. ஆனால் பொதுவான சில எச்சரிக்கைக் குறிப்புகளைச் சொல்லலாம்.
இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் 'ஆமாம்' என்றிருந்தால்.... சந்தேகமே இல்லை. உங்கள் குழந்தைகள் இன்டர்நெட் அடிமைகள்தான். உடனடியாக மனநல மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டிய தருணம் இது.
தனிமையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பல குழந்தைகளுக்கு இன்டர்நெட்டே வடிகாலாக இருக்கிறது. தினசரி பிரச்னைகளில் இருந்து தப்பிக்கவும், கவலைகளில் இருந்து விடுபட்டு, ஆறுதலடையவும் அவர்கள் இன்டர்நெட்டை நாடலாம். இன்டர்நெட்டில் மூழ்கும் போது, தன்னை வாட்டும் கவலைகள், தனிமை, மன அழுத்தம் என எல்லாமே காற்றில் கரைந்து காணாமல் போகிற மாதிரி அவர்கள் உணரலாம். ஆனால் அது தற்காலிகமானது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
இன்டர்நெட் அடிமைத்தனம் என்பது, மன உளைச்சல் (Anxiety), மன அழுத்தம் அல்லது மனசோர்வின் (Depression) ஒரு அறிகுறியாகவும் பார்க்கப்பட வேண்டும். சமூக உளைச்சல் (social anxiety), மற்றும் மனசோர்வின் காரணமாக உணரும் தனிமையையும், சோர்வையும், அலுப்பையும், சலிப்பையும், சுவாரசியமின்மையையும் இன்டர்நெட் பட்டென பறந்து போக்கிவிடும். அதனால்தான் மனநல மருத்துவரின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் பேரில் இந்தப் பிரச்னையை அணுக வேண்டியது அவசியம்.
மன உளைச்சலும், மனசோர்வும் சரி செய்யப்பட்டாலே, உங்கள் பிள்ளையின் கம்ப்யூட்டர் மோகம் கட்டுப்படும். அப்படி மன உளைச்சலும், மனசோர்வும் இல்லாத பிள்ளைகளுக்கு 'காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி' கொடுக்கலாம். அது படிப்படியாக உங்கள் குழந்தையின் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உபயோகத்தைப் பற்றிய கருத்துக்களை மாற்றி, அவர்களை வெளியே வரச் செய்யக்கூடும். அது மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கிற உணர்ச்சிப் போராட்டங்கள், கொந்தளிப்புகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தக் கற்றுக் கொடுக்கும்.
Chapter 13:
குழந்தைகள் வளர, வளர, அவர்களது நட்பின் எல்லைகள் மாறும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.... குழந்தைகளாக இருக்கும் போது, அவர்கள் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், பள்ளியில் சக மாணவர்களுடனும், சேர்ந்து விளையாடுவோர். யாரிடம் நட்பு கொள்வது என்பதில் அந்த வயதில் அவர்களுக்குப் பெரிய சாய்ஸ் இருக்காது. அருகில் இருப்பவர்களுடன் நட்பு பாராட்டத்தான் அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் டீன் ஏஜில், நட்பைப் பற்றிய அவர்களது பார்வை மாறும். யாருடன் நட்பாக இருப்பது என்பதில் அதிக கவனமாக இருப்பார்கள். அந்தஸ்து, பொதுவான விருப்பு, வெறுப்புகள், சுய மதிப்பீடு மற்றும் ஆளுமையின் அடிப்படையில் நண்பர்களைத் தேர்வு செய்வார்கள். இதை ஒரு முக்கியமான மாற்றமாகக் கருதி பெற்றோர் அங்கீகரிக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் குழந்தைகள், தமது உணர்வு ரீதியான தேவைகளுக்கு பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளையே தேடுவார்கள். பெற்றோரிடமிருந்து விலக ஆரம்பிக்கிற விடலைப் பருவத்தில், அவர்கள், சக வயது நண்பர்களுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தை உருவாக்கிக் கொள்ளவே விரும்புவார்கள். புரிதலுக்கும், ஆதரவுக்கும், வழிகாட்டுதலுக்கும், அவர்களுக்கு பெற்றோரையும், குடும்பத்தாரையும் விட, நண்பர்களே சரியானவர்களாகத் தெரிவார்கள். உங்கள் பிள்ளைகள் பள்ளியில் சக மாணவர்களுடன் கூடி கருத்துகள் ஒத்த கட்சிகளை உண்டாக்குவார்கள். அவர்களுடைய கருதுகள் உங்கள் கருத்துகளுக்குப் புரம்பானதாக இருக்கலாம். இது டீன் ஏஜில் ஏற்படுகிற இயல்பான ஒரு விஷயம்தான். ஆனாலும் பெற்றோரை உறுத்தவே செய்யும்.
பெரும்பாலும் ஆரம்பத்தில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுடனேயே பல குழந்தைகள் நட்பு கொள்கிறார்கள். அந்த வயதில் மிகச் சிறந்த நட்பு என்பது எப்போதும் இரு சிறுவர்கள் அல்லது இரு சிறுமிகளுக்கு இடையில்தான் இருக்கும். டீன் ஏஜ் ஆண்களின் நட்புக்கும், அந்த வயதுப் பெண்களின் நட்புக்கும் வித்யாசமுண்டு. ஆண்களின் நட்பில் விளையாட்டு மாதிரியான நடவடிக்கைகள் அதிகமாகவும், பெண்களின் நட்பில் பேச்சும், பகிர்தலும் அதிகமாகவும் இருக்கும்.
டீன் ஏஜை தொட்டதும், அவர்களது ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக, நட்பு என்பது, பாலினம் கலந்த நட்பாக மாறுகிறது. இன்னும் சொல்லப் போனால், அந்த வயதில் எதிர்பாலினத்தாரிடம், எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். இதுவும் அந்த வயதுக்கே உரிய இயல்பான மாற்றம்தான். சரியாகப் புரிந்து கொள்கிற பெற்றோருக்கு இந்த விஷயத்தில் பயமிருக்காது. டீன் ஏஜில் உருவாகிற நட்பானது, பிற்காலத்தில், அவர்கள் தொழிலில் கூட பணிபுரியும் வேற்று பாலினதாருடனோ, மேலதிகாரியுடனோ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிக்குத் தேவையான விஷயங்களையும் கற்றுத் தருகிறது.
நட்பு என்பது அவர்களுக்கு இன்னொரு குடும்பம் மாதிரி. தன் வீட்டில் கிடைக்காத புதிய உலக அனுபவம் அவர்களுக்கு அந்த நட்பு வட்டத்தில் கிடைப்பதாக உணர்வார்கள். நண்பர்களுக்கிடையே உணர்வுப் பரிமாற்றங்கள் சாத்தியம். ஓரு ஆண் பெண்ணிடமும், ஒரு பெண் ஆணிடமும் எவ்வாரு நடந்து கொள்ள வேண்டும் என்பது அந்த நட்பு வட்டத்தின் மூலம், பாலுணர்வு அற்ற நிலையில், அவர்கள் அறிவார்கள். ஆயினும் அந்த பந்தம் இனக்கவர்ச்சியாக மாறுவதர்கு வாய்ப்பு உண்டு. ஆகையால் உங்கள் பிள்ளைகளிடம் உங்களுக்கு இணக்கம் தேவை. பெரும்பாலான பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டம் பற்றித் அவர்களாக பிள்ளைகளிடம் கேட்டுத்தெரிந்து கொள்வதில்லை. தம் பிள்ளைகளைப்பற்றி அவர்களிடம் சேரும் செய்திகள் இரண்டாம் தரப்பாக மற்ற பிள்ளைகளிடமிருந்து சேகரிக்கப்பட்டவையாகும். இவ்வாறு சேகரித்த செய்திகள் திரித்துக்கூரப்பட்ட செய்திகளாக இருக்கலாம். ஆகையால் அச்செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை சரியற்றதாக இருக்கலாம். அவ்வாறு நீகங்கல் நடவடிக்கை எடுத்தால் அது தீங்கு இளைக்கக்கூடும். ஆகையால் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் நட்போடு உரவாடி அவர்களிடமிருந்தே அவர்களுடைய நட்ப்பைப்பற்றித்தெரிந்து கொள்வது அவசியம்.
பாசிட்டிவான நட்பின் அடையாளங்கள்: பரஸ்பரமும், ஒற்றுமையும்; பகிர்தலும், அக்கறையும்; ஆதரவும், புரிதலும்; வேடிக்கையும், மகிழ்ச்சியும்; உற்சாகமும் உணர்வுப்பூர்மான ஆதரவும்.
உங்கள் டீன் ஏஜ் பிள்ளைக்கு ஒரு நல்ல நட்பு அமைந்து விட்டதால், அவனோ(ளோ) உங்களை விட்டு விலகுவதாக அர்த்தமில்லை. ஒரு விடலைப் பருவத்துப் பிள்ளையின் வாழ்க்கையில் உண்டாகும் நல்லது, கெட்டதின் தாகுதலை சமாளிக்க, அவர்களது நண்பர்கள் உதவுவார்கள். டீன் ஏஜ் பருவதில் பல சமுதாய, குடும்ப, மற்றும் படிப்பு சார்ந்த சுமைகளுக்கு ஆழாவார்கள். இருக்கும் பிள்ளைகளுக்கு படிப்பில் விளையாட்டில், அச்சுமைகளை சம்மளிக்கவும், அவையால் உண்டாகும் மன அழுத்தங்களைப் பக்குவமாகக் கையாளவும் அந்த நட்பு அவர்களுக்கு உதவும்.
நெகட்டிவான நட்பின் அடையாளங்கள்: பொசசிவ்னஸ் மற்றும் பொறாமை; போட்டி மனப்பான்மை; சுயநலம்.; பகிர்தலற்ற மனப்போக்கு; தன்னை மையப்படுத்தியே பேசுவதும், செயல்படுவதும்; மற்ற நட்புகளையும், குடும்பத்தாரையும் விட்டு விலகச் சொல்வது; போதைப்பொருள் உபயோகத்தை ஊக்குவிப்பது.
விடலைப் பருவத்து இனக் கவர்ச்சி
விடலைப் பருவத்துக் காதல் நமக்கொன்றும் புதிதில்லை. நிறைய பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் பால்ய விவாகம்தான் பரவலாக பழக்கத்தில் இருந்திருக்கிறது. அறியாத வயதில் திருமணம் முடித்து, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போதே குழந்தை, குட்டி, குடும்பம் என்கிற வட்டத்துக்குள் வந்த கதைகளைக் கேட்டிருப்போம்.
இன்றைய உலகில் 15 வயதில் வாலிப வாசலில் நிற்கிறவர்களுக்கு துணை என்கிற பெயரில் ஒருவர் அவசியம் என நினைக்கிறார்கள். அவர்கள் பார்க்கிற திரைப்படங்களும், அவர்களது ஆஸ்தான நட்சத்திரங்களின் வாழ்க்கை முறையும் இந்த கண்ணோட்டத்தை வலியுறுத்துகின்றன. டீன் ஏஜில் இப்படி அவர்களுக்குள் பூக்கும் உறவும், அது தரும் நெருக்கமும், தாய்பாச நெருக்கத்தைப் பிரதிபலிப்பதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். அந்த உணர்வு, போதை மருந்து எடுக்கும்போது, மூளையில் உண்டாகிற உணர்வுக்கு நிகரானது என்கின்றன ஆராய்ச்சிகள். அது ஒரு ஆனந்த அனுபவமாகவும், அடிமைத் தனமாகவும்கூட உணரப்படும்.
டீன் ஏஜ் காதலுக்கு 3 முகங்கள் உண்டு.
வயது முதிற்ந்தவருக்கு இணக்கம் மேற்படும். ஆனால் டீன் ஏஜில் நெருக்கம் முக்கியத்துவம் வய்ந்ததாகத்திகழும்.டீன் ஏஜில் உண்டாகிற இந்த ஈர்ப்பு பெரும்பாலும் வந்த வேகத்திலேயே காணாமல் போவதும் சகஜம். ஆனாலும் அந்த சிறிய அனுபவம் விடலைப் பருவத்தினரின் வாழ்க்கையில் மிகமுக்கியமானதாக அமையும்.
இவ்வித ஈர்ப்பில் பங்கு கொள்ளும் பதின்ம வயதினர், நேரிலோ, தொலைபேசியிலோ மணிக்கணக்கில் பேசுவது சகஜம். இன்னொருவருடன் நெருக்கம் வளர்க்கிற இந்த அனுபவத்தின் மூலம் அவர்கள் தம்மைத் தானே உணர்வார்கள். அந்த நெருக்கத்தில் பகிர்தலும், நம்பிக்கையும், வெளிப்படையான குணமும் உருவாகும். அது தரும் பக்குவம், அதன் தொடர்ச்சியான புதிய உணர்வுகள் போன்றவற்றின் விளைவாக மனமுதிற்சி மலரும்.
அதே சமயத்தில் பெரும்பாலான விடலைப் பருவத்தினருக்கு உடல் ரீதியான தேடல்களும் ஆரம்பமாகும். அந்த வயதில் ஊற்றெடுக்க ஆரம்பிக்கிற ஹார்மோன்கள்தான், விடலைப் பருவத்து செக்ஸ் தூண்டுதல்களுக்கு அடிப்படை. அது அவர்களுக்கு அதுவரை அனுபவித்திராத புதிய அனுபவமாக இருக்கும்.
டீன் ஏஜில் செக்ஸ் ரீதியான சிந்தனைகளும், ஈர்ப்புகளும் தலைதூக்கும். ஒரு சிலருக்கு இதெல்லாம் குழப்பத்தைத் தரும். இதெல்லாம் அதீதமாகச் சுரக்கும் ஹார்மோன்களின் தூண்டலின் விளைவே தவிர வேறில்லை. இந்த உடற்க்கூற்றின் முடிவு இனப்பெறுக்கம். இந்த உணர்வுகள் ஆண், பெண் இருவருக்கும் பொது. ஆனால் ஆண்களுக்கு பெரும்பாலும் இந்த தூண்டுதல் எந்தவிதமான உணர்வுப் பிணைப்பும் இல்லாமல் செயல்படும். அதுவே ஒரு பெண்ணுக்கு அது உணர்வுடன் தொடர்புள்ள ஒரு விஷயமாக விளங்குவதனால்தான் 'ஐ லவ் யூ' சொல்கிற ஆண்களிடம், பெண்கள் சுலபமாக ஈர்க்கப் படுகிறார்கள். இனக்கவற்சிக்கும் காதலுக்கும் விதியசம் தெரியாத வயசு அது.
இன்றய சமுதாயத்தில் இந்த இனப்பெறுக்க உந்துதல் அறிவு வளர்ச்சி, ஒழுக்கம், மதப்பற்று மற்றும் இதர காரணிகளால் பக்குவப்படுதப்படுகின்றன. இந்த விஷயத்தில் மனிதர்களை விலங்குகளிடமிருந்து தனித்து இயங்கச் செய்வது அவர்களது ஆறறிவு. அந்த ஆறறிவைப் பயன்படுத்தி, தனது பொறுப்புகளையும், செயல்களையும், அவற்றுக்கான பின் விளைவுகளையும் சிந்திக்கின்ற பதின்ம பருவ இளைஞர்கள் இக்கட்டத்தை பாதிப்பிண்றி கடந்து விடுவார்கள். ஆவ்விதப்பக்குவம் குன்றிய இளைஞர்கள் ஹார்மோன்களுக்கு அடிமையாகி பாலியல் குளப்பத்தில் மூழ்கிவிடுகின்றனர்.
விடலைப் பருவத்துக் காதல் மிக மிகச் சாதாரணமானது என்றாலும், அதை அப்படியே அலட்சியமாக விடவும் முடியாது. டீன் ஏஜில் பூக்கும் இத்தகைய காதலை, அடுத்தடுத்த கட்டங்களுக்கு, அதாவது பள்ளிப் பருவத்துக் காதலை, கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் வரை கொண்டு போகிறவர்களும் உண்டு. இத்தகைய உறவில் விழும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, படிப்பு உள்பட, விளையாட்டு, கலை என வேறு விஷயங்களின் மீது கவனம் திரும்பாமலேயே வாழ்க்கை நகரும்.
இந்த விஷயத்தில் பெற்றோரின் பங்கு என்ன?
உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ, எதிர்பாலினத்து நட்பிடம் எப்படிப் பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்கிறார்கள் என்பதைக் கண்காணியுங்கள்.
உங்கள் மகனோ, மகளோ, அந்த உறவில் அதிக ஈடுபாடு காட்டுவது தெரிந்தால், அதை பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொடுங்கள். குறிப்பிட்ட அந்த நபருடன் போன் அல்லது சாட்டிங்கில் தொடர்பு கொள்ள, நேரக் கெடு விதியுங்கள். மற்ற நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிட ஊக்கப்படுத்துங்கள்.
அந்த நபருக்காக விலை உயர்ந்த அன்பளிப்புகளை வாங்கித் தருவதை ஊக்கப்படுத்தாதீர்கள். உடையோ, நகையோ அன்பளிப்பாகப் பகிரப் படுகிற பட்சத்தில், அதை உபயோகிப்பதில் எதிராளிக்கு ஏற்படக் கூடிய தர்மசங்கடத்தை உணர்த்துங்கள். ரொம்பவும் பர்சனலான அந்த அன்பளிப்புகள், அந்த நபரின் மீதான உங்கள் பிள்ளையின் கமிட்மென்ட்டை மறைமுகமாக உணர்த்தக்கூடிய அபாயத்தையும் எடுத்துச் சொல்லுங்கள்.
அதைத் தவிர்த்து சிடி, புத்தகங்கள் அல்லது வாழ்த்து அட்டைகள் பாதுகாப்பானவை என எடுத்துச் சொல்லலாம். ஒரு வேளை அன்பளிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், அதைக் கொடுத்தவரின் உணர்வுகள் புண்படக்கூடும் என்பதையும் சொல்லுங்கள்.
அந்த வயதில் உங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட உணர்வு தற்காலிகமானது என்று உங்களுக்குத் தெரியும். ஆனாலும் உங்கள் பிள்ளையின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்களை நம்பி தனது புதிய உறவு குறித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, அதைக் கிண்டலோ, கேலியோ செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், அடுத்த முறை உங்கள் பிள்ளைகள் தம் விஷயங்களை மறைக்கவே முயற்சிப்பார்கள்.
உங்கள் குடும்பத்துக்கு எது முக்கியம் என்பதையும், அந்த வயது உறவு பற்றியும் உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள். ஹொர்மோங்களின் தாகங்களைப்பற்றியும் அதனால் உண்டாகும் இனக்கவற்ச்சியைப்பற்றியும் எடுத்துரையுங்கள்.
யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பதைப்பற்றி உங்கள் பிள்ளைகளிடம் உறவாடுங்கள். குறைந்த பட்சம் படிப்பறிவு, ஒழுக்கம், பக்குவம், நிறைந்தவர்களுடன் பழகுவதன் ஆதாயங்களை எடுத்துச்சொல்லுங்கள். அதுமட்டுமல்ல அவ்வித நண்பர்களை உங்கள் பிள்ளை தேர்ந்தெடுத்தால் அந்த உறவை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் டீன் எஜ் உறவைப் பயன்படுத்தி, உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் உள்ள உறவை வலியுருத்துங்கள்.
அதே சமயத்தில் கவனத்தைக்குறைக்காமல் அந்த உறவை கண்காணிப்பது அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்பதைப்பற்றி உங்கள் பிள்ளையிடம் உறவாடுங்கள். அந்த உறவு அளவுக்கு மீறும் பட்சத்தில் உங்கள் பிள்ளையை எச்சரியுங்கள். காமம், பாலுறவில் ஈடுபடுவது, பால்ய கருத்தரிப்பு, பாலியல் வியாதிகள் போன்றவற்றின் இன்னல்களைப்பற்றி விவாதியுங்கள். அவை எவ்வாரு நன்மதிப்பிற்கு கேடு விளைவிக்கும் என்பதை எடுத்துச்சொல்லுங்கள். தேவை என்ற பட்சத்தில் அந்த நண்பரின் பெற்றோருடன் அந்த உறவைப்பற்றி பேசத்தயங்காதீர்கள்.
இதை எல்லாம் மீறி அந்த உறவு திசைமாரிபோவதுபோலிருந்தால் அதை துண்டிக்கத்தயங்காதீர்கள். ஆனால் அவ்வாறு துண்டிப்பதற்க்கு முன் மேற்கூறிய அனைத்தையும் செய்து முடித்தீர்களா என்பதை சிந்தியுங்கள். ஏனென்றால் அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் நாளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் இடையே உள்ள உறவு முறிந்து விடும். மேலும் அந்த உறவைத்துண்டித்த பிறகு உங்கள் பிள்ளையிடம் அதிக பாசத்தை பிரயோகப்படுத்தி உங்கள் உறவை வலியுறுத்த மறக்காதீர்கள்.
Chapter 15
உங்கள் குழந்தைகளுக்கு உடலுறவு பற்றி, காதல் பற்றி, உறவுகள் பற்றியெல்லாம் ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கும். அவற்றைப் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் தேடி அவர்கள் நாடும் நபர்கள் பெற்றோராக் விளங்கும் வகையில் நீங்கள் அமைத்துக்கஒள்வது அவசியம். அதற்கு முன்னோடியாக அவர்கள் இளம் குழந்தைகளாக இருக்கும் போதே அவர்கம் தங்களப்பற்றி (உடற்கூரு உட்பட) எந்தவித அச்ச்மும் இன்றி உங்களுடன் உறையாடும் வகையில் பார்த்துக்கோள்வது அவசியம்.
உங்கள் பிள்ளைகள் தன் உடல் பற்றியோ, எதிர்பாலினத்தாரின் உடலமைப்பு பற்றியோ, செக்ஸ் பற்றியோ ஏதேனும் கேள்வியுடன் உங்களிடம் வந்தால், உடனே பதைபதைக்காதீர்கள். பேச்சை மாற்றாதீர்கள். 'வயசுக்கு மீறிப் பேசாதே' எனக் கண்டிக்காதீர்கள். பொய்யான பதிலையும் தராதீர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் பிள்ளையிடம், அவரது சந்தேகம் குறித்த பேச்சைத் தொடருங்கள். நேர்மையாகவும், கண்ணியமாகவும் விளக்கம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
ஆனால் அத்தகைய உரையாடலைத் தொடங்கும் முன், நீங்கள் சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.
*பாதுகாப்பான் உடலுறவு பற்றி உறையாடுவதப்பற்றி உங்கள் கருத்து?
மேலே சொன்ன இந்த விஷயங்களில் எல்லாம் உங்களுக்குத் தெளிவான கருத்து இருக்குமேயானால், செக்ஸ் மற்றும் உறவு முறை குறித்த உங்கள் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதும் சுலபமாக இருக்கும். இல்லையென்றால் முதலில் மேலே சொன்ன இந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்து தெளிவடைவது முக்கியம்.
அந்தப் பேச்சை எப்படித் தொடங்குவது என்பதில் உங்களுக்குத் தயக்கமிருந்தால், சினிமாவில் அல்லது சின்னதிரையில் அப்படியொரு காட்சி வரும்போது, அதையே உங்கள் உரையாடலுக்கான ஆரம்பமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களைத் தெளிவாகவும், உறுதியாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்வது முக்கியம். ஒருவேளை உங்களுக்கே அந்த விஷயங்களில் தெளிவின்றி இருந்தாலும், அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து அதைப்பற்றி தெளிவடையும் ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்.
அப்படிப் பேசும் போது, லெக்சர் அடிக்கிற தொனியில் நீங்கள் நினைப்பதை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், உங்கள் பிள்ளைகள் தரப்பு கருத்துக்களையும் கேட்டறியுங்கள். அந்த விஷயங்கள் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்றும், என்ன நினைக்கிறார்கள் என்றும் கேளுங்கள். மேலும் அவைர்களுக்கு எந்த நோக்கில் இன்டெரெஸ்ட் இருக்கிரதோ அந்த நோக்கில் பேச்சைத்தொடருங்கள். அப்போதுதான் அவர்கள் ஏதேனும் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும், உங்களால் சரிப்படுத்த முடியும். நீங்கள் விவாதிக்கிற விஷயங்கள் குறித்து அவர்களுக்கு ஏதேனும் வருத்தங்கள் உண்டா என்பதையும் கேட்டறியுங்கள்.
உங்கள் வளரிளம் பருவத்தைப்பற்றி சற்று நினைத்துப்பாருங்கள். அப்பருவத்தில் உங்களிடையே பாலுணர்வினால் உண்டான உடல் மற்றும் மன கொந்தளிப்புகளைப்பற்றி சிந்தியுங்கள். அப்போதைய சூழலுக்கு அவ்வுணற்சிகளை அடக்கி ஆழ்வது அவசியமாக இருந்திருக்கும். ஆனால் செல் போன், ஃபேஸ் புக், பப் (Pub) மற்றும் பாப் (Pop) சமுதாயம் ஆகையினால் தற்போதய ஸ்மூக சூழ்னிலையில் வளரிளம் பருவத்தினரிடையே "டேடிங்க்" என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பரவி வருகிரது. இது பெரிய நகரங்களில் மட்டும் அல்லாது சிறு நகரங்களிலும் பரவி வருகின்றது.
“இது வளரிளம் பருவத்தின் ஒரு அங்கம். சிறிது வயது முதிர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று அலட்சியமாக இருந்திடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் இன்று மற்ற பாலினதாருடன் மேற்கொள்ளும் உறவுகளே நாளை அவர்களின் உறவுகள் நலமாக உருவாகுமா இல்லையா என்பதை முடிவு செய்யலாம். இப்படி இருக்கும் சமயதில் நீங்கள் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுடன் டேட்டிங்க் பற்றி கலந்தாலோசிப்பது அவசியம். அப்படிச்செய்யும் பொழுது அவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுத்தபடி அதே சமயம் டேட்டிங்க் பற்றிய உங்கள் கொள்கைகளையும் அவற்றின் அடிப்படைக்ளையும் நாசூக்காக எடுத்து சொல்வது அவசியம்.
அவ்வாறு பேசும்பழுது இதுதான் உங்கள் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கோட்பாடுகள் அமைத்தீற்களேயானால் உங்கள் பிள்ளைகள் அதை மீரத்தான் நினைப்பார்கள். மாறாக அவர்களுடைய குறிக்கோள்களுக்கும், எதிர்காலத்திற்க்கும் எது நல்லது, எது உதவாது என்று அவர்களே உணரும்படி எடுத்துக்கூறுங்கள்.
தற்ப்போதைய செய்தியில் தலைத்தூக்கும் பிரபலங்களின் வாழ்க்கைச்சிக்கல்களை முன்வைத்து இதைப்பற்றிய உறவாடலைத் துவக்கலாம். பிரபலங்களின் வாழ்க்கைச்சிக்களினால் எனன பாடங்கள் கற்றுக்கொள்ளலாம் என்பதைப்பற்றி பேசலாம். பிரபலங்களின் உறவுகளில் எவை நலமானவை எவை நலமற்றவை என்பதை எடுதுறைத்தீர்களேயானால் அது ஒரு லெக்சராக இல்லாமல் ஒரு சுவரசியமான உறையாடலாக அமையும்.
இதுதான் உங்கள் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வெளிப்படையாக எடுதுறைப்பதற்க்கு மாறாக, இந்த பிரபலத்தின் சிக்கலில் முடியாமலிருக்க அவர்கள் தம் வளரிளம் பருவத்தில் எவ்வறு நடந்து கொண்டிருக்கலாம் என்று டிஸ்கஸ் செய்தால் விதிமுரறைகள் நாசூக்காக உள்ளேரும். பிறகு உஙகள் கட்டுப்பாடுகளை oppandhaஒப்பந்த நோக்குடன் எடுத்துறைத்து உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் ஒப்பந்தத்தை மேற்க்கொண்டால் அதை சகஜமாக மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு, உங்கள் பெண் ஒரு பார்ட்டிக்கு சென்று இரவு 10 மணிக்கு திரும்பும் திட்டதுடன் இருப்பதாக தெரிந்தால் முதலில் அவளை பார்ட்டி நடக்கும் இடதிற்க்கு நீங்களோ அல்லது வேறு பொறுப்பான நபரோ அவளை கூட்டிசென்று அங்கு தெரிந்த பொருப்பான நபருடன் ஒப்படைக்க ஒப்பந்தம் பேசலாம். அந்த நபர் ஒரு பொருப்புடைய, உங்கள் பெண் பொருப்புடன் நடந்து கொள்வதை கண்காணிக்கக்கூடிய ஆண்மகனாகவும் இருக்கலாம். பிறகு 8 மணிக்கு நீங்களோ அல்லது வேறு பொறுப்பான நபரோ சென்று அவளை தெரிந்த நபரிடமிருந்து மீட்டு வர அவளுடன் ஒன்று சேர்ந்து முடிவெடுக்கலாம். அதை விட்டு விட்டு பார்ட்டிக்கு செல்லக்கூடாது, ஆண் பிள்ளைகளுடன் உறவாடக்கூடாது, 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால் உங்கள் பிள்ளையிடம் உங்களுக்கு உள்ள உறவு முரிவதுடன், அவள் உங்கள் பேச்சை மீருவதற்க்கும் வாய்பை ஏற்படுத்தி விடுவதுடன், அவள் உங்களிடமிருந்து அவளுடைய நடவடிக்கைகளை உங்களிடமிருந்து மறைக்கவும் துணிவாள்.
ஆவளுடன் சேர்ந்து முடிவெடுப்பதால் அவள் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது என்ற உணற்வு ஏற்படுவதுடன், அந்த முடிவுக்கு அவளும் பொறுப்பு என்ற உணர்ச்சியை உண்டாக்குவதுடன் உங்கள் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து உங்கள் பந்தம் பலப்படுத்தப்படும்.
“சரி, என்னுடைய பிள்ளை ஸெக்ஸ் சிந்தனையில் ஈடு பட மாட்டாள் என்று எப்படி உறுதிபடுத்தலாம்?” என்று கேட்டீர்களேயானால் அதற்கு ஒரே பதில் – “முடியாது”. அவள் அவ்வித சிந்தனைக்கு ஆளானாலும் பொருப்புடன் நடந்து கொள்வாள் என்ற நம்பிக்கையைதான் வளர்க்க முடியும். அது, நீங்கள் அவளுடன் ஸெக்ஸ் பற்றி எவ்வாறு பேசியிருக்கிரீர்கள் என்பதை பொருந்தும். இன்று 10 வயது பிள்ளைகளே ஸெக்ஸ் பற்றி அறிந்துள்ளனர். ஆகையால் ‘டீவீ’யில் படத்தில் ஆபாசம் வரும் பொழுது “பாக்காதே” என்று கண்ணை மறைப்பதோ, “போய் தண்ணி கொண்டு வா” என்று திசைத்திருப்புவதோ இன்று பொருந்தாது. அதைத்தவிர்த்து அந்த சயத்தில் ஸெஸ் பற்றி வயசுக்கு தகுந்த விதத்தில் பேசினால், பிள்ளை வளர்ந்த பிறகு பாலுணற்வு பற்றி அவளுடன் பேசவும், போதிக்கவும் உதவும். அவ்வாறு போதிக்கும் பொழுது சில விஷயங்களை அவசியம் வலியுருத்த வேண்டும். அவை:
சற்றே வயது முதிர்ந்த ஆண் பிள்ளைகள், இளம் பெண்களைக் கவரலாம்.
அவர்களில் சிலரிடம் உள்ள பணம், வாகனம் போன்றவை அந்த ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்தலாம்.
அப்போது பாலுறவில் ஈடுபடும் ரிஸ்க் தலைதூக்குகிறது.
அவ்வாறு பாலுரவில் ஈடுபட்டல் பாலுறவு நோய்களுக்கு ஆளாகலாம். கரு தறிக்கலாம்.
இள வயதில் கரு தறிந்தால் உண்டாகும் இன்னல்கள்.
வளரிளம் பருவத்தில் திருமணம் செய்வதின் இன்னல்கள்
இளம் வயதில் அவசரப்பட்டு குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சமுதாய ஆதரவு இல்லமல் படும் கஷ்ட்டங்கள்
Chapter 17:
பள்ளி இறுதி அல்லது கல்லூரிப் படிப்புக்காக ஊரை விட்டு, பெற்றோரைப் பிரிந்து வேறிடம் போய் தங்கிப் படிக்கிற பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டேக்கம் (Home sickness) அவர்களைப் பாடாகப் படுத்துகிறது. ஆனால் இதை உடனடியாக பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வீடேக்கம் என்பது வீட்டை விட்டு பிரிந்துள்ளவர்களிடம் அல்லது பிரியப்போகிறவர்களிடம் உண்டாகும் இடர்பாடு மற்றும் அவல்னிலையைக் குறிக்கும்.
வீடு, வீட்டிலுள்ள நபர்கள், வீட்டுச் சாப்பாடு, வீட்டுக்குத் திரும்புதல் என வீட்டைப் பற்றிய, வீட்டைச் சூழ்ந்த அத்தனை நினைவுகளும் உண்டாக்கும் ஒருவித மன வேதனை தான் வீட்டேக்கம்.
வீட்டேக்கம் என்பது வாழ்ந்த, பழகிய வீட்டையும், சூழலையும் விட்டு புதிய இடத்துக்கு மாறுகிற எல்லோருக்கும் உண்டாகும். அதில் ஆண், பெண் பேதமோ, யாரை, எவ்வளவு பாதிக்கும் என்கிற அளவுகோலோ இல்லை. 20 சதவிகித ஆண் / பெண் பிள்ளைகள், வீட்டை விட்டு விலகிச் சென்று படிக்கிற போது, கொஞ்சம் கடுமையான வீட்டேக்கத்தை அனுபவிக்கிறார்கள். 6 முதல் 9 சதவிகிதக் குழந்தைகளுக்கு, வீட்டேக்கமானதுஇன்னும் கொஞ்சம் தீவிரமாகவே இருக்கிறது.
வீடேக்கத்தால் பாதிக்கப்படுகிற பிள்ளைகளில் 80 சதவிகிதம் பேர், ஆரம்பத்திலிருந்து, மறுபடி வீடு திரும்புகிற வரை ஒரே அளவிலான மன வருத்தத்தை அனுபவிக்கிறார்கள். 20 சதவிகிதம் பேர், சற்றே அதிகமான பாதிப்பை உணர்கிறார்கள். அது வீட்டை விட்டு வெளியேறிய முதல் சில வாரங்களில் இன்னும் அதிகரிக்கிறது. மறுபடி வீட்டுக்குத் திரும்புவதற்கு சில நாள்கள் முன்புதான் அது குறையவே தொடங்குகிறது.
வீடேக்கத்துடன், உடல்நலமின்மை, படிப்பில் சந்திக்கிற சிரமங்கள், கவனமறதி, தன்னம்பிக்கையின்மை, நடத்தைக் கோளாறு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். அதுவே தீவிர வீட்டேக்கத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, மனச்சஞ்சலம், மற்றும் படபடப்புடன் தனக்கு உதவ யாருமே இல்லை என்கிற உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளலாம். சில பிள்ளைகளிடம் அது சண்டை, சச்சரவு, கீழ்த்தரச் சூளுரை, தவரான வாய்ப்பேச்சு, அழிவுச்செயல் போன்றவையாக வெளிப்படலாம்.
வீட்டேக்கம் உண்டாகாமல் தடுக்க அனுபவம், ஆளுமை, குடும்பம் மற்றும் மனப்பாங்கு உதவும்.
ஏற்கனவே வீட்டாரை விட்டு மிகக் குறுகிய காலம் பிரிந்த அனுபவம் உள்ள டீன் ஏஜ் பிள்ளைகளையும், அந்த அனுபவமே இல்லாத பிள்ளைகளையும், மிகவும் இள வயதுப் பிள்ளைகளையும் வீட்டேக்கம் சட்டென பாதிக்கலாம். இதில் வயது முக்கியம் அல்ல. அனுபவம்தான் இந்த விஷயத்தில் மிக முக்கியமான காரணி. 8 வயதுக் குழந்தையாக இருக்கலாம். அவனு(ளு)க்கு அடிக்கடி வீட்டாரை விட்டுப் பிரிந்திருந்த அனுபவம் இருந்தால், படிப்புக்காக வெளியே தங்க வேண்டி வரும் போது வீட்டேக்கம் உண்டாகும் வாய்ப்புகள் குறைவு. 16 வயதுப் பிள்ளையாக இருக்கலாம். வீட்டை விட்டு விலகியிருந்த அனுபவமே இருக்காது. அந்தக் குழந்தைக்கு வீட்டேக்கம் உண்டாக வாய்ப்பு அதிகம். புதிய சூழல் உருவாக்கும் எதிர்மறையான அனுபவங்களும், எதிர்பார்ப்புகள் நிரைவேறாத ஏமாற்றங்களும் இவ்வகை வீட்டேக்கம் வரக் காரணங்கள்.
பெற்றோருடன் நிலயற்ற பிணைப்பு மற்றும் இருமனப்போக்குடைய பந்தம் கொண்ட குடும்பத்தில் வாழும் பிள்ளைகள் குடும்பத்தை விட்டுப்பிறியும் பொழுது அதிகமாக பிரிவினைப்பத்ற்றத்திற்க்கு ஆழாவார்கள். தனது பிரிவினை உணர்வுகளை வெளிப்படுத்தினால் அதை பெற்றோர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்கிற உறுதியற்ற மனநிலையில் இருப்பார்கள் இந்தப் பிள்ளைகள். மற்றவர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் தான் தகுதியானவர்தானா என்கிற குழப்பமும் இருக்கும். இந்த உறுதியற்ற தன்மையின் விளைவாக, ஹாஸ்டல் வார்டன் அல்லது ஆசிரியர்களுடனான புதிய சூழல் அதிகபட்ச வேதனையை உண்டாக்கும்.
மாறாக பெற்றோருடன் நிலையான பிணைப்புள்ள பிள்ளைகள் சுதந்திரமாக, புதிய சூழலலை அனுபவிக்க துணிவதுடன் புதிய உறவுகளில் ஈடுபடும் ஆர்வமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தீர்மான கையாளுதல் அதிமாக உள்ள பிள்ளைகள் வீட்டேக்கத்தை குறைவாக உணருவார்கள். வீட்டை விட்டு வெளியேரும் முடிவு பிள்ளையின்மேல் திணிக்கப்பட்டால் அந்த பிள்ளை அந்த தீர்மானத்தை கையளுவதை குறைவாக உணரும். இதன் விளைவாக அந்த பிள்ளை பிரிவினையை வேதனையாக அனுபவிக்கும்.
தமக்குள் உண்டாகும் பிரிவினை பதற்றத்தை வெளிப்படையாக காட்டும் பெற்றோரும், பிரிவினையைப்பற்றி இருமனப்ப்போக்குடைய பெற்றோரும் (நீ போய் சந்தோஷமா இரு; நான்தான் உன்னை நெனைச்சுக்கிட்டே இருப்பேன்"), பிரிந்து போகும் பிள்ளையிடத்தே அதிக வீட்டேகத்தை உண்டு பண்ணுவர்.
வெளியில் தங்கிப்படிக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கு சில டிப்ஸ்....
வீட்டைவிட்டு வெளியே தங்கப் போகும் நேரம் குறித்த விஷயத்தில் உங்கள் பிள்ளைகளின் முடிவையும் கேளுங்கள். அதைத் தவிர்த்து, பிள்ளைகளைக் கட்டாயத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியே அனுப்பினால், அது அவர்களது வீட்டேக்கத்தை அதிகப்படுத்தும். பிரிவதற்கு முன்பே, அதைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள். ''வெளியில தங்கிப் படிக்கிற எல்லாரும், ஏதோ ஒரு வகையில சில விஷயங்களை மிஸ் பண்ணித்தான் ஆகணும். ஹோம் சிக் எல்லாம் சகஜமான விஷயம்... அதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, வீட்டு ஞாபகம் இருந்ததுன்னா, உன்னால இன்னும் நிறைய விஷயங்களை யோசிக்க, செயல்படுத்த முடியும்'' என்று உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள்.
பிரிவுத் துயரத்தைக் கையாளும் வழிகள் பற்றிச் சொல்லக்கூடியவை:
உங்கள் பிள்ளைகளிடமிருந்து விலகி இருக்கும் நேரம் மிகக் குறுகியது என நினைத்துக் கொள்ளுங்கள். விலகி இருக்கும் பிள்ளைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதைத் தவிருங்கள். விலகி இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்குத் தகவல் தொடர்பின் அவசியத்தைப் புரிய வையுங்கள். கடிதங்கள் எழுத ஊக்கப்படுத்துங்கள். இதை முன்கூட்டியே திட்டமிட்டு, தபால் தலை ஒட்டி, முகவரி எழுதிய அஞ்சல் உறைகளையும், நினைத்தவற்றை எழுத ஒரு நோட்டையும் கொடுத்தனுப்பலாம்.
உங்கள் பிள்ளையுடன் இணைந்து, அவர்களது புதிய சூழலைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள். முன்கூட்டியே அதைத் தெரிந்து கொள்ளும் போது, பிள்ளைகள் புதிய இடத்துக்குச் செல்லும் போது ஏற்படக் கூடிய அந்நியத்தன்மை குறையும். இணையதளங்கள், குறிப்பேடுகள், ஏற்கனவே அந்த இடத்தில் இருப்பவர்கள், முன்னாள் மாணவர்கள், அங்கே வேலை பார்ப்பவர்கள் என பல தரப்பினரிடமிருந்தும் இதற்கான தகவல்களைப் பெறலாம்.
புதிய சூழலில் யாரேனும் ஒருவராவது உங்கள் பிள்ளைக்கு அறிமுகமாக உதவுங்கள். அந்த நபர், உங்கள் பிள்ளையைவிட வயதில் பெரியவராகவோ, சக மாணவராகவோ இருக்கலாம். அப்படியொருவருடனான அறிமுகம், உங்கள் பிள்ளையின் வீட்டேக்க உணர்வைக் குறைத்து, தனக்கு ஒரு துணை இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
புதிய நபர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளவும், நம்பிக்கையான, தன்னைவிட வயதில் பெரியவர்களின் உதவியைப் பெறவும் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். புதிய இடத்து இறுக்கத்தைக் குறைக்க இதெல்லாம் உதவும்.
மது அருந்தும் பழக்கம் இந்தியாவில் சமுதாயத்தின் ஒரு அங்கமாக பறவி வருகிறது. அதனால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றிய உரையாடலும் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மது அருந்துவதைப்பற்றி நாம் கேள்விப்படும் தகவல்கள் முரணாகவே உள்ளன.
இருபதுகளின் மத்தியில்தான் ஒருவரின் மூளையானது முழுமையான வளர்ச்சி அடைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அப்படிக் கடைசியாக முழுமை பெறுகிற மூளையின் ப்ரீ ஃபரான்ட்டல் கார்ட்டெக்ஸ் (Pre-Frontal Cortex) எனும் பகுதி, நாம் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்து, முடிவெடுக்க காரணகர்த்தா. டீன் ஏஜில் பிள்ளைகள் எடுக்கிற விபரீத முடிவுகளின் பின்னணியும், அதைக் கண்டு பெற்றோர் அதிர்ந்து போவதன் பின்னணியும் ப்ரீ ஃபரான்ட்டல் கார்ட்டெக்ஸின் முதிர்ச்சி குறைவினால் தான்.
மதுபானங்கள் அருந்துவதால் வயதுக்கேற்ப உடலில் விளைவுகள் உண்டாகும். பெரியவர்கள் மது அருந்துவதால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படும். ஆனால் குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினர், மதுபானங்கள் அருந்துவதன் மூலம், அவர்களது சராசரி மூளை முதிற்சி பாதிக்கப்படலாம்.
டீன் ஏஜ் பிள்ளைகள் போதை மருந்து மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகக் காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் 4 முக்கிய விஷயங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.
டீன் ஏஜில் இருக்கும் போது, தம் நண்பர்கள் செய்வதைத் தாமும் செய்ய நினைத்து, அதன் மூலம் அவர்களிடம் அங்கீகாரத்தைப் பெற நினைப்பது முக்கியம். ஒரு சிலருக்கு போதை மற்றும் மது எடுத்துக் கொள்வதால் மனநிலையிலும், நடத்தையிலும் ஏற்படுகிற மாற்றங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம். சக நண்பர்களின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது வேறு சமூகக் காரணங்களுக்காகவோ, டீன் ஏஜில் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும். பிறகு அளவளாவற் கூட்டத்தின் பேரில் தொடரும். அளவளாவற் காரணத்திற்க்கு மட்டும் குடிக்கும் டீன் ஏஜ் பிள்ளைகள் கொஞ்சமாகவே குடிப்பார்கள். மேலும் அளவோடு குடிப்பார்கள்.
பொதுவாக நம் மூளயில் எண்டொர்ஃபின்ஸ் (endorphins) மற்றும் இதர இன்ப இரசயணங்கள் , இன்பம் தரும் நடவடிக்கயில் ஈடுபடுவதன் மூலம் சுரக்கும். உடற் பயிற்சியில் ஈடுபடும் பொழுதும் இந்த இரசாயனங்கள் சுரக்கும். ஆனால் சிலரின் மூளையில் இன்ப இரசாயனங்கள் குறைவாக சுரப்பதால் அவர்கள் சாதாரணமாக வழ்க்கையில் இன்பத்தை அனுபவிக்க மாட்டார்கள். இது ஒரு மரபணு நோய் என்றே கூறலாம். இத்தகைய மூளை வகைவடிவம் கொண்ட பிள்ளைகள் அளவளாவற் கூட்டத்தின் பேரில் குடிக்க ஆரம்பித்து இன்பத்தை பெரும் முயற்ச்சியில் அளவுக்கு மீறி குடிக்கத்தொடருவார்கள். அனால் மது அருந்துவதன் மூலம் போதை தான் உண்டாகுமே தவிற இன்ப இரசாயனங்கள் சுரக்காது. இவ்வாறு இன்ப இரசாயனங்கள் குறைவாக சுரக்கும் மூளையைக்கொண்டவர்கள் இன்பத்தை உண்டாக்க மது மற்றும் போதைப்பொருளை உபயோகித்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.
குடிப்பழக்கத்தைப் பற்றி பெற்றோர் என்னதான் போதித்தாலுமே, பிறப்பிலிருந்தே உடனிருக்கும் சில ஜீன்களை மாற்றவா முடியும்? குடிப்பழக்கத்துக்கும், மரபணுக்களுக்கும் தொடர்புண்டு. சில நபர்களுக்கு இயல்பிலேயே குடியின் மீது ஒரு வெறுப்பு இருக்கும். அதுவே அவர்களை குடிப்பழக்கத்திலிருந்து விலகி இருக்கச் செய்யும். ஒரு சிலருக்கு ஆல்கஹால் எதிர்ப்புத் திறன் மிக அதிகமாக இருக்கும். ஆல்கஹாலின் விளைவுகளை முழுமையாக உணர, மற்றவர்களை விட அதிகம் குடிக்கத் தயங்க மாட்டார்கள். சிலர் அபாயத்தை ரசிக்கும் ஜீங்களைக்கொண்டவற்களாக இருப்பார்கள். இவர்கள் போதையின் அபாயத்தை ரசிப்பதர்க்காகவே குடிப்பார்கள். சிலர் எழுச்சியை தவிற்க்கும் இயல்பு குறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களால் மது அருந்தும் சூழ்னிலயின் எழுச்சியை தவிற்க்க முடியாது.
இப்படி மனநிலையை மாற்றிக் கொள்ள குடிப்பவர்கள் அளவுக்கதிகமாகக் குடிப்பார்கள். இவர்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப ரீதியான மற்றும் சமுதாய அளவிலான காரணங்களை முன்னிட்டு குடிப்பார்கள்.
போதை, மது தொடர்பான சூழலே தெரியாத பிள்ளைகளுக்கு, அவற்றை உபயோகிக்கிற வாய்ப்புகளும் குறைவு. அதன் மூலம், அவற்றால் உண்டாகும் அடிமைத்தனம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கிறார்கள். எனவேதான் சிறுவயதுப் பிள்ளைகளுக்கு இவற்றின் பரிச்சயமின்றி வளர்க்க வேண்டியது அவசியம். ஆனால் அதே சமயத்தில், இவ்வாறு மதுவுலிருந்து விலகியிருந்தால் மட்டும் அவர்கள் போதைக்கு அடிமையாக மாட்டார்கள் என்று கூற முடியாது.
குடிப்பழக்கத்துக்கு எதிரான ஒரு விதியை உருவாக்குவதில் பெற்றோருக்கே சிக்கல்கள் இருக்கலாம். அதனால் குடிப்பழக்கத்தைப் பற்றியோ, அது தொடர்பான பிரச்னைகளைப் பற்றியோ பிள்ளைகளிடம் விவாதம் செய்வதுமே அவர்களுக்கு சிக்கலான ஒரு விஷயமாகலாம்.
டீனேஜ் பிள்ளைகள் தம் பெற்றோர் தம் குடிப்பழக்கத்தை கண்டிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. ஊக்கம் கொடுத்து, ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிற............ உணர்வுள்ள பெற்றோரால் வளர்க்கப்படுகிற பிள்ளைகள் என்றால், பெற்றோர் விதிக்கிற எல்லைகளை மதிக்கிறவர்களாக இருப்பார்கள்.
இத்தகைய பெற்றோரால் வளர்க்கப்படுகிற பிள்ளைகளுக்கு, நண்பர்கள் அல்லது சக பிள்ளைகளின் பழக்கங்களின் தாக்கத்தால் பாதிக்கப்படுவது குறைவாகவே இருக்கும். ஏனென்றால் அந்தப் பிள்ளைகளுக்கு பிரச்னைகளை சமாளிக்கிற பக்குவம் தெரிந்திருக்கும். அதனால் உணர்ச்சிவயப்பட்டு, எந்தப் பிரச்னைக்கும் ஆல்கஹாலை தீர்வாகத் தேடி ஓடும் அளவுக்கு மனமுதிர்ச்சி குறைவாகவும் இருக்காது. பெற்றோர் போதித்த ஒழுக்கம் மற்றும் அவர்களது ஆதரவு இரண்டின் காரணமாக, ஆல்கஹால் அபாயம் அறிந்தவர்களாக இருப்பார்கள்.
குழந்தைகளிடம் குடி மற்றும் போதை வஸ்துக்களைப் பற்றி எப்போது, எப்படிப் பேச வேண்டும் என்பதில் பெற்றோருக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். குடிப்பழக்கம் தவறானது என்பது குறித்த ஆரோக்கியமான மனப்போக்கை வளர்த்து, அதன் மூலம் குடியின் ஆபத்துக்களில் இருந்து பிள்ளைகளை மீட்கும் மிகப் பெரிய பங்கு பெற்றோருக்கு உண்டு.
மேல்தட்டுக் குடும்பங்கள் சிலவற்றில், டீன் ஏஜ் பிள்ளைகளை வீட்டுக்குள் மட்டும் குடிக்க அனுமதிக்கிற பெற்றோரும் இருக்கிறார்கள். அப்படி அனுமதிப்பதன் மூலம், அவர்களது குடிப்பழக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என நம்புகிறார்கள். அப்படி பெற்றோரின் அனுமதியின் பேரில் வீட்டுக்குள்ளேயே குடிக்க ஆரம்பிக்கிற பிள்ளைகள், அடுத்தடுத்து வெளியில் குடிக்கவும், அதிலும் அதிகம் குடிக்கவும் ஆரம்பிப்பார்கள். அதே நேரம் இளவயதில் குடிப்பது கூடாது எனக் கட்டுப்படுத்தப்படுகிற பிள்ளைகள், குடிப்பழக்கத்துக்கு அறிமுகமானாலுமே, அளவோடு குடிக்கப்பார்கள் என்று கூற முடியாது.
ஊக்கம் கொடுத்து, ஒழுக்கம் வலியுறுத்துகிற............ உணர்வுள்ள, அளவோடு குடிக்கும் பெற்றோருடன், பொருத்தமான சமூகச்சூழ்னிலையில், அளவோடு குடிக்க துவங்கிய பிள்ளைகள் பிற்க்காலத்தில் அதிகமாக குடிக்கும் வய்ப்பு குறைவு. அதிக செல்லம் கொடுத்து தடையற்று வளர்க்கும், அளவுக்கு மீறி குடிக்கும் பெற்றோருடன் குடிக்கத்துவங்கும் டீன் அஜ் பிள்ளைகள் அளவுக்கு மீறி குடிக்க வய்ப்புகள் அதிகம்.
குடிப்பழக்கம் குறித்த குடும்ப விதிமுறைகளும், பெற்றோரின் குடிப்பழக்கமும் இந்த விஷயத்தில் மிக முக்கியம். அளவுக்கு மீறி மது அருந்தும் பெற்றோர் குடிக்கக்கூடாது என்று போதிப்பபது பொருந்தாது. மாறாக அவர்கள் அளவுக்கு மீறி குடிப்பதனால் உண்டாகும் விளைவுகளைப்பற்றி வலியுருத்தலாம். குடிக்கக் கூடாது, சிகரெட் பழக்கம் கூடாது என்று மட்டும் போதிக்காமல் குடியினால் கெட்ட சொந்தக்கரர்கள், நண்பர்கள், பிரபலங்ககள் என்பன மாதிரியான விஷயங்களைப் பற்றிப் பிள்ளைகளிடம் உறுதியாகவும், தொடர்ந்தும் பெற்றோர் வலியுறுத்தும் போது, பிள்ளைகள் நிச்சயம் அவற்றுக்குக் காது கொடுப்பார்கள். வெறும் 19 சதவிகித டீன் ஏஜ் பிள்ளைகள்தான், பெற்றோர் விரும்பும் இசையைக் கேட்கவும், 26 சதவிகிதப் பிள்ளைகள்தான், பெற்றோர் சொல்கிறபடி உடையணியவும் சம்மதிக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஆனால் 80 சதவிகிதப் பிள்ளைகள், குடிப்பழக்கத்தைப் பற்றி பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடக்கவே விரும்புகிறார்கள் என்று அந்த ஆரய்சி சொல்கிறது. பெற்றோரின் வளர்ப்பு முறை என்பதை மீறி, குடித்தது தெரிந்தால் பெற்றோர் வருத்தப்படுவார்கள் என நினைக்கிற பிள்ளைகள் அதைச் செய்வதில்லை. பெற்றோருக்கு இதில் தலையிட உரிமையில்லை என நினைக்கிற பிள்ளைகள் குடி போதைக்கு அடிமையாக நாங்கு மடங்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.
இளவயதுக் குடிப்பழக்கம் குறித்த பெற்றோரின் கருத்துக்கள் தெரிந்த பிள்ளைகள், பெற்றோரின் எதிர்பார்ப்பை மீறுவதில்லை. இதுவரை உங்கள் வீட்டில் குடிப்பழக்கம் குறித்த விதிமுறைகள் இல்லாமலிருந்தால், உடனடியாக விதிகளை வலியுறுத்துங்கள். விரைவாகவும், அடிக்கடியும் பிள்ளைகளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும். நிலைமாறாமல், தொடர்ந்து, எதிர்பார்ப்புக்கு முரணற்ற விதிமுறைகளை வகுக்க வேண்டும். மேலும் தாம் சொல்வதை பெற்றோர் கடை பிடிக்க வேண்டும்.
பிள்ளைகளின் நண்பர்களின் பெற்றோர்களுடன் கலந்து பேசி, எல்லா பிள்ளைகளும் எங்கே கூடுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணியுங்கள். இளவயதில் இத்தகைய தவறான பழக்கங்களுக்குள் செல்வதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எங்கெல்லாம் வாய்ப்புண்டோ, அங்கெல்லாம் பேசுங்கள். குறிப்பிட்ட வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு மது விற்பதற்குத் தடை விதித்துள்ள உங்கள் மாநிலச் சட்டம் பற்றியும் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கும், விடலைப் பருவத்தினருக்கும் பெற்றோரின் பேச்சுக்கு இணங்குவதிலும், அதை எதிர்ப்பதிலும் வித்யாசம் உண்டு. குழந்தைப் பருவத்தில், பெரும்பாலும், அவர்கள் பெற்றோர் பேச்சுக்கு கீழ்படியவே நினைப்பார்கள். அதுவே விடலைப் பருவத்தில், பெரியவர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் அவர்களது வளர்ச்சிப் பயணத்தில், அது எதிர்ப்பாக மாறும். வெளிப்படையாகவும், மரியாதையுடனும் பேசி, அவர்களுக்கான எல்லைகளையும், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளையும் புரிய வைக்கும் பட்சத்தில், விடலைப் பருவத்திலும் சரி, அதற்கடுத்தடுத்த கட்டங்களிலும் சரி, பிள்ளைகளை பெற்றோரால் சரியாக வழிநடத்த முடியும். குடியைப் பற்றிய டீன் ஏஜ் பிள்ளைகளின் சிந்தனைகளை, அதாவது குடிப்பது சரியா, தவறா.... எப்படிக் குடிக்கலாம், அது உண்டாக்கும் பிரச்னைகள் என்ன என்கிற விஷயங்கள் குறித்த முடிவுகளுக்கு பெற்றோரின் இந்த அணுகுமுறை பிள்ளைகளிடம் நல்ல விதத்தில் செயல்படும்.
பாசிட்டிவான நடத்தையுடன், நல்ல தகவல் பரிமாற்றத்துடன், சரியான விதிமுறைகளை வகுத்து, கண்காணிப்புடன் வளர்க்கிற பெற்றோரின் பிள்ளைகள், மதுப்பழக்கத்தைத் தவிர்த்து விட வாய்ப்புகள் அதிகம். மதுப்பழக்கம் இல்லாத நட்பு வட்டமும் அவர்களுக்கு உதவும்.
இந்த விஷயத்தில் பள்ளிக்கூடங்களுக்கும் பொறுப்பு உண்டு. பள்ளி நேரம் முடிந்த பிறகு பிள்ளைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும். மூளையில் இன்ப இரசயன்ங்களைச் சுரக்க வைக்கும் விளையாட்டு, மற்றும் இதற புறப்பால் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஆசிரியர்களும், விளையாட்டு மற்றும் பிற துறை பயிற்சியாளர்களும் பிள்ளைகளுக்கு சிறந்த முன்மாதிரியாளர்களாக இருக்க வேண்டும்.
தவிர.....
Chapter 20;
The purpose of this Website is to promote public awareness about mental health
The contents of this site are for informational purposes. Nothing contained in this site is or should be considered or used as a substitute for professional medical or mental health advice, diagnosis, or treatment. Never disregard medical advice from your doctor or delay seeking it because of what you have read.
Terms of Use (Updated 5th Sep. 2018). Privacy Policy (Updated 18th May 2018).
© 2010-2021 Doc Gautham's Neuro Centre, a unit of Sakthisri Healthcare Solutions.
All rights reserved. Site updated 05 March 2021
Leading Expert Experienced Neuro Psychiatrist | 5 Star Rated | Top Best Psychiatry Clinic | Chennai, India | Depression / Head ache / Anxiety / Stress / Child Behavior / Dementia | Online / Video/ Telemed Consult / Counselling
ph: +91 95661 33660
info